ஐக்கிய தேசிய கட்சி செய்த கர்மவினையின் பலாபலன்: பியல் நிஷாந்த

Report Print Steephen Steephen in அரசியல்

முழு நாட்டையும் நெருக்கடிக்குள் உள்ளாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி தற்போது நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாகவும், அது அந்த கட்சி செய்த கர்மவினை பலாபலன் எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

நாட்டை கட்டியெழுப்புவதாக பொய் கூறி ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கம், நாட்டை அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியான நெருக்கடிக்கு உள்ளாக்கியது. ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதே ஐக்கிய தேசியக் கட்சி தற்போது எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை.

அமைச்சர் சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் நவீன் திசாநாயக்க, அமைச்சர் ராஜித சேனாரத்ன என அனைவரும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட போட்டி போடுகின்றனர். இவர்களில் எவர் வேட்பாளராக வந்தாலும் அவரை தோற்கடிக்கக் கூடிய திறமையான வேட்பாளரை நாங்கள் நிறுத்தியுள்ளோம்.

ஐக்கிய தேசியக் கட்சி தற்போது துண்டு, துண்டாக சிதறி போயுள்ளது. அந்த கட்சி பல வருடங்களுக்கு கட்டியெழுப்ப முடியாது. ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 89 நாட்களே உள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் 59 நாட்கள் இருக்கின்றன.

இவற்றுக்கு இடையில், மூன்று அமைச்சுக்கள் எந்த வெட்கமும் இன்றி அப்பாவி மக்களின் பணத்தை விரயமாக்கி வருகின்றன. சஜித் பிரேமதாச, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோரின் அமைச்சுக்கள் மிக மோசமாக மக்களின் பணத்தை விரயமாக்கி வருகின்றன.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் எதிர்பார்ப்பில் தமது பிம்பத்தை உயர்த்தி காட்ட இந்த பணம் பல்வேறு பிரச்சார நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டு வருகிறது.

இந்த அமைச்சுக்களின் அனைத்து அதிகாரிகளுக்கு கூற விரும்புகிறேன். இன்னும் 89 நாட்களில் சிறைக்கு செல்ல தயாராக இருங்கள் எனவும் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...