எனக்கு எந்த தடையும் இல்லை! கோத்தாவின் அறிவிப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எனக்கு எந்த தடைகளும் இல்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

நான் ஏற்கனவே அமெரிக்க குடியுரிமையை கைவிட்டுள்ளதுடன் தற்போது இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளேன்.

ஆனால் சிலர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் முயற்சியில் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர்.

எவ்வாறாயினும், தற்போது தேர்தலில் போட்டியிடுவதற்கு எனக்கு எந்த தடைகளும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.