ஐ.தே.கவின் அமைச்சர்கள் அனைவருக்கும் பிரதமர் ரணில் விடுத்துள்ள விசேட அழைப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து அமைச்சர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விருந்துபசாரம் ஒன்றிற்காக அழைப்பு விடுத்துள்ளார்.

நாளையதினம் அலரிமாளிகையில் குறித்த விருந்துபசாரம் இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 4 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல், ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால செயற்பாடு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.