எதிர்காலத்திற்காக ரணில் எடுத்துள்ள முடிவு! ஆதரவு கரம் நீட்டும் மகிந்த

Report Print Jeslin Jeslin in அரசியல்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமருக்கு அதிகாரங்களை அதிகப்படுத்துவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த திட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெற்றிப்பெற்றாலும் பெயரளவு ஜனாதிபதியும் அதிகாரங்கள் அதிகம் உள்ள இடமாக பிரதமர் பதவியும் மாற்றம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.

இது எந்தளவு சாத்தியம் என்ற கேள்வி எழுகின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சட்ட வல்லுனர்கள் இந்த நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.