யார் போட்டியிட்டாலும் ஐ.தே.கட்சியின் பிளவை தடுக்க முடியாது

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதித் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அந்த கட்சி பிளவுப்படுவதை தடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களின் சந்திப்பில் கலந்துக்கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தலைமையை மதிக்காதவர்கள் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ளனர். தலைமைதுவத்தை மதிக்காத அப்படியான நபர்களுக்கு கட்சிக்குள் இருந்து செயற்பட முடியாது.

இதனால், ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் ஏற்பட்டுள்ள மோதல்கள் மேலும் உக்கிரமடையும்.

பிரதமர், கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச உட்பட அனைவரும் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டாலும் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற செய்ய மக்கள் எடுத்த தீர்மானத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...