தற்போது பாதுகாப்பான நாடாக இலங்கை: ஜோன் அமரதுங்க

Report Print Ajith Ajith in அரசியல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் காரணமாக நாட்டில் நடைமுறையில் இருந்த அவசரகால நிலை அடுத்த வாரம் நீக்கப்படும் என தான் நம்புவதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது பாதுகாப்பான இடமாகும், சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருவதற்கு பாதுகாப்பான இடமாக இருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் பலமுறை சான்றளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதில் துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், விசாரணைகள் நடைபெற்று வருவதால் அவசரநிலை தொடர்கிறது. அடுத்த வாரம் நிறுத்தப்படும் என தான் கருதுவதாக அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவசரகால நிலை நீக்கப்பட்டவுடன் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Latest Offers

loading...