ஜனாதிபதி மைத்திரியை சந்திக்கின்றனர் கூட்டமைப்பினர்!

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு நாளை மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார். காணி விடுவிப்புடன் தொடர்புடைய விடயதானங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சின் கீழ் உள்ளடங்குகின்றன.

எனவே தான் இவ்விடயம் தொடர்பில் அவரை சந்திக்கவிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Latest Offers

loading...