நாட்டின் பொருளாதாரம் மேம்பாடடைய இதை செய்ய வேண்டும்! காதர் மஸ்தான்

Report Print Theesan in அரசியல்
34Shares

வன்னி மாவட்டத்தில் உள்ள எமது விவசாயிகளுக்கு அரசாங்கம் சிறந்த சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதன் மூலம் எமது விவசாயிகள் மாத்திரமல்ல நாட்டின் பொருளாதாரமும் மேம்பாடு அடையும் என பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இன்று நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர்,

அரசாங்கம் அளிக்கும் இந்த ஊக்குவிப்பானது சுய தேவைக்கான விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை வர்த்தக ரீதியான விவசாய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாக மாற்ற முடியும்.

வன்னியில் பெருமளவாக காணப்படுகின்ற வளமிக்க நிலங்களை விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு அரசாங்கம் ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் விவசாயத்திற்கு பெயர் போன பிரதேசமாக காணப்படும் மாதோட்டம் புராதன காலந்தொட்டு இன்று வரையிலும் விவசாயத்தில் சிறப்பான பகுதியாக விளங்குகிறது.

எனினும், எமது வன்னி மாவட்டத்தின் எல்லாப் பிரதேசங்களிலும் விவசாயிகள் மிகுந்த கஷ்டத்துடனேயே விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையை போக்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இன்று வன்னி மாவட்டத்தில் விவசாயிகள் கடும் கஷ்டத்துக்கு மத்தியில் தமது விவசாயத் தொழிலை முன்னெடுத்து வருகின்றனர். நீரைத் தேக்கி வைத்து விவசாயத்தை முன்னெடுக்க பாழடைந்த குளங்களை சிறந்த முறையில் புனர்நிர்மாணம் செய்ய வேண்டும்.

இன்று வன்னி மாவட்டத்தில் அதிகளவான பாழடைந்த குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுவருகின்றது இது வரவேற்கத்தக்க விடயமாகும்.

இதுதவிர விவசாயிகளின் ஊக்குவிப்புத் திட்டங்கள், காப்புறுதிகள், மானிய அடிப்படையில் சலுகைகள், சிறந்த சந்தை வாய்ப்புக்கள் போன்றவற்றில் அரசு இன்னும் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறு விவசாயிகளின் முன்னேற்றத்தில் அரசு செலுத்துகின்ற கவனம் நாட்டில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்திலும் செல்வாக்கு செலுத்துவதுடன் விவசாயிகளிடத்தில் சிறந்த நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.