கூட்டமைப்பின் உள்வீட்டுப் பூசல்:விசாரிக்க மூவர் கொண்ட குழு

Report Print Jeslin Jeslin in அரசியல்
82Shares

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராஜா, எஸ்.சிவமோகன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வார்த்தை மோதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தனது மகனின் பெயரில் ஓர் அரச காணியை அபகரிக்கின்றார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்கு அவ்வாறு எந்தக் காணியையும் தான் அபகரிக்கவில்லை என்று உரிய விளக்கத்தை சாந்தி சிறீஸ்கந்தராசா வழங்கியிருந்தார். இந்த வாக்குவாதங்கள் உச்சம் தொட்டுள்ள நிலையிலேயே இது தொடர்பில் விசாரிக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.