பிரம்மாண்ட மக்கள் கூட்டத்தில் சஜித்! ரணிலின் முக்கியஸ்தர்கள் பலர் மேடையில்

Report Print Vethu Vethu in அரசியல்
1880Shares

சஜித் உங்களுடன் பேச வருகிறார் என்ற தலைப்பிலான மற்றுமொரு பாரிய பொதுக்கூட்டம் மாத்தறையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் பெருந்திரளான மக்களுடன் பொதுக்கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இந்த கூட்டத்தை அமைச்சர் மங்கள சமரவீர ஒழுங்கு செய்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக சஜித் பிரேமதாஸ பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

அவருக்கு பலம் சேர்க்கும் வகையில் முதலாவது பொதுக்கூட்டம் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் பதுளையில் நடைபெற்றது.

இந்நிலையில் இன்றையதினம் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஆதரவில் மற்றுமொரு பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் பெருமளவு சஜித் ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.