தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது!

Report Print Murali Murali in அரசியல்
133Shares

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அமைச்சர் ரிசாட்டின் கட்சி ஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.

அமைச்சர் பி. ஹெரிசன் இதனை தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர, “ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் முரண்பாடான நிலைமை இந்த வார இறுதிக்குள் தீர்க்கப்படும்.

நாட்டில் உள்ள ஜனநாயகத்தை மதிக்கும் ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சியாகும்.

எனவே அதற்குள் நெருக்கடி நிலையும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அமைச்சர் ரிசாட்டின் கட்சி ஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.