சஜித் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

Report Print Murali Murali in அரசியல்
172Shares

ஐக்கியதேசிய கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவிற்கு ஆதரவளிக்கவேண்டிய நிலையேற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கருத்தை கோடிட்டு ஆங்கில செய்தி இணையமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் வெளியிட்டுள்ளது.

சஜித்பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டால் நாங்கள் மக்கள் விடுதலை முன்னணிக்கு ஆதரவளிக்கவேண்டிய நிலையேற்படலாம் என அவர் தெரிவித்தார் என இந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச, தமிழ் மக்கள் வடக்கில் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்து வெளிப்படையாக தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்ஃ

புதிய அரசமைப்பு தொடர்பில் அவரது நிலைப்பாடு என்னவென்பது எங்களிற்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அதிகாரப்பகிர்வு குறித்த சஜித் பிரேமதாசவின் நிலைப்பாடும் எங்களிற்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.