ஐ.தே.கவின் உள்வீட்டு பிரச்சினையை தீர்த்துக்கொண்டு பொது கூட்டணியை அமைத்து மக்கள் மத்தியில் செல்வதே சிறந்து என நாடாளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
எனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க முதலில் தன்னை சுயவிமர்சனம் செய்துக்கொள்ள வேண்டும். ரணிலுக்கும், சஜித்துக்கும் இடையிலான முறுகல் நிலைமைக்கு உடனடியாக தீர்வு காணப்படவேண்டும்.
அவ்வாறு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் மாத்திரமே பொது கூட்டணி தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி சிந்திக்கும்.
வெறுமனே உள்வீட்டு பிரச்சினைகளுக்கும், அதிகார பிரச்சினைகளுக்கும் தீர்வை பெறாமல் பொது கூட்டணியை அமைப்பதில் எந்தவித நன்மையும் இல்லை மேலும், கோத்தபாயவை ஆதரிக்ககூடிய களத்தை அவர் இதுவரையில் உருவாக்கவில்லை என்றார்.