இளைஞர்களை தேடி தேடி கொலை செய்தவர்களுக்கு...! அரசாங்கம் தொடர்பில் என்ன கூறுகிறார் மகிந்த?

Report Print Sujitha Sri in அரசியல்
154Shares

சித்திரவதைப்பட்டவர்களும், அதற்கு எதிராக குரல் கொடுத்தவர்களும் இன்று ஓரணியில் திரண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாமரை தடாக அரங்கில் பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணியின் மாநாடு இன்று மாலை இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கடந்த காலங்களில் இளைஞர்களை தேடி தேடி கொலை செய்தவர்களுக்கும், சித்திரவதை செய்தவர்களுக்கும் அன்று முறையான தண்டனை வழங்கியிருந்தால் இந்த அரசாங்கத்தை நடத்த தலைவரும், அமைச்சர்களும் இருந்திருக்க மாட்டார்கள்.

பட்டலந்த சித்திரவதை முகாம் 1989ஆம் ஆண்டுகளில் அம்பிலிப்பிட்டியவில் இருந்து பட்டலந்தை வரை பல இடங்களில் சித்திரவதை முகாம் இருந்ததை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இந்த காலக்கட்டத்தில் தான் மனித உரிமைகள் என்ற வார்த்தையை முதன் முதலில் அறிமுகம் செய்தோம் என கூறியுள்ளார்.