தொல் திருமாவளவன் பங்கேற்ற லண்டன் கூட்டத்தில் சலசலப்பு!

Report Print Sujitha Sri in அரசியல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்ட லண்டன் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விம்பம் கலை, இலக்கிய, திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் தொல் திருமாளவனுடன் இரு நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் லண்டனில் ஆரம்பமாகியிருந்தன.

இதன்போது தொல் திருமாவளவனின் அமைப்பாய் திரள்வோம் நூல் வெளியீட்டு நிகழ்வும், கலந்துரையாடலும் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் குறித்த நிகழ்வில் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

என்றபோதும் குழப்பம் ஏற்பட காரணமானவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதன் பின் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் சுமூகமாக, தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிகழ்வுகள்.

Latest Offers