மாளிகைக்குள் நடந்த இரகசிய சந்திப்பு! தோல்வி உறுதியானதா? கடும் அதிருப்தியில் கோத்தபாய

Report Print Vethu Vethu in அரசியல்
1665Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவினை பெற்றுக்கொள்ளும் தீவிர முயற்சியில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் இரகசிய சந்திப்பு ஒன்று மஹரகமயில் ஜனாதிபதியின் சகோதரரருக்கு சொந்தமான மாளிகையில் நேற்றிரவு நடைபெற்றதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் சகோதரனின் அழைப்பின் பேரில் கோத்தபாய அங்கு சென்றுள்ளார். ஜனாதிபதியின் ஆதரவை பெறுவதற்கே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியின் ஆதரவு ராஜபக்சர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக கோத்தபாய ராஜபக்ஷ கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவின்றி தான் வெற்றிபெற முடியாது என்பதை கோத்தபாய நன்கு உணர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த ஆதரவை பெற்றுக்கொள்ள எந்தவொரு கட்டத்திற்கு செல்லவும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு மிகவும் இரகசியமாக காணப்பட்டதாகவும், அதனை உறுதி செய்யும் வகையில் மாளிகையின் பின்பக்க வாயிலாக கோத்தபாய உள்நுழைந்ததாக ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.