கட்சியை பிளவுப்படுத்த சஜித் செய்யும் சதி!

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்தும் முயற்சியில் சஜித் பிரேமதாச ஈடுபட்டுள்ளார் – என்று முன்னாள் இராணுவத் தளபதியான அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அண்மையில் மாத்தறையில் நடத்தப்பட்ட மக்கள் பேரணி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஜனாதிபதி தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், தன்னைதானே வேட்பாளராக அறிவித்துக்கொண்டு சிலர் பிரசாரம் முன்னெடுக்கின்றனர். இது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையாகும்.

அவரது கூட்டத்தில் உரையாற்றுபவர்கள் யார்? எல்லாம் இளம் அரசியல்வாதிகள். அவர்கள் இன்னும் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகவில்லை என்பது இதன்மூலம் உறுதியாகின்றது.” என்றும் அவர் கூறினார்.