கோத்தபாயவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பொன்சேகா!

Report Print Vethu Vethu in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வேட்பாளராகும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தத் தகவலை ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் சிலர் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் பின் வரிசை உறுப்பினர்கள் சிலருக்காக பொன்சேகா கொழும்பில் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விருந்தின் போது, தான் ஜனாதிபதி வேட்பாளராகுவது தொடர்பில் எதிர்பார்ப்பில் இருப்பதாக பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கட்சியுடன் கலந்துரையாடல் மேற்கொள்வோம் என பின்வரிசை உறுப்பினர்கள் பொன்சேகாவிடம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார். இந்நிலையில் அவரை எதிர்த்து பொன்சேகா போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Latest Offers