சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நிமல் சிறிபால டி சில்வா வெளியிட்டுள்ள விடயம்

Report Print Steephen Steephen in அரசியல்

தேசிய பாதுகாப்பு பற்றி சிந்திக்கும், நாட்டை நேசிக்கும் தலைவர் ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என அந்த கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஹல்துமுல்லை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டை நேசிக்கும் அரசியல் கட்சி மற்றும் தலைவரை சரியான நேரத்தில் நாட்டு மக்கள் தெரிவு செய்வார்கள். தற்போது நாட்டின் இராணுவ தளபதியை நியமித்தாலும் வெளிநாடுகள் அழுத்தங்களை கொடுக்கின்றன.

எமது நாட்டின் பிரச்சினை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறும் தலைவரை நாங்கள் ஜனாதிபதி தெரிவு செய்வோம் எனவும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.