தொடர்ந்து அடம்பிடிக்கும் மைத்திரி! விடுக்கப்பட்டுள்ள விசேட அழைப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் விசாரணைக்காக முன்னிலையாக மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வந்த நிலையிலேயே குறித்த அழைப்பு அவருக்கு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

மேலும், விசாரணைக்கான திகதி மற்றும் நேரத்தை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான திகதி, நேரம் வழங்கப்பட்ட பின்னர் அவர் தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.