ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள ராஜபக்ச குடும்பத்தினர்

Report Print Steephen Steephen in அரசியல்

ராஜபக்சவினர் நாட்டின் ஜனநாயகத்தை மதிக்காதவர்கள் என தேசிய பொதுமக்கள் சபையின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

ஹட்டன் ஹில்சைட் ஹோட்டலில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனநாயகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததாகவும் போரை முடிவுக்கு கொண்டு வந்ததை ஜனநாயகத்தை இல்லாமல் செய்ததாக கூறுகின்றனர் எனவும் ஊடகவியலாளர்களுக்கு இடமளித்ததாகவும் எழுத சந்தர்ப்பத்தை கொடுத்ததாகவும் கோத்பாய ராஜபக்ச கூறுகிறார்.

கோத்தபாயவுக்கு நினைவில்லையா, ராஜபக்ச குடும்பத்தினருக்கும் நினைவில்லையா, இவர்களுக்கு ஞாபக மறதி நோய் இருக்கின்றதா?.

போர் நடைபெற்ற காலத்தில் நாட்டு மக்கள் ஜனநாயகத்தை பாதுகாத்தனர். நாட்டு மக்கள் ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்தனர். அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனநாயக விழுமியங்கள் பாதுகாக்கப்பட்டன.

எனினும் போர் முடிவுக்கு வந்த பின்னர், அவை அனைத்தும் இல்லாமல் போனது. போர் முடிவுக்கு வந்ததும் ராஜபக்சவினர் ஜனநாயகத்தை இல்லாமல் செய்தனர். அப்படி செய்த கோத்தபாய ராஜபக்ச தாம் ஜனநாயகத்தை பாதுகாத்ததாக கூறுவது கேலிக்குரியது எனவும் சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.