கல்முனை பிரதேசமெங்கும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

Report Print Gokulan Gokulan in அரசியல்

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் நம்பிக்கை தரும் நம்பகரமான வேட்பாளர் என குறிப்பிட்டு நேற்று மாலை கல்முனை நகரப்பகுதி, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை பகுதிகளில் இவ்வாறு குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இச்சுவரொட்டிகள் யாவும் அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Latest Offers