மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளரும் இறுதி நேரத்தில் மாற்றப்படலாம்?

Report Print Jeslin Jeslin in அரசியல்

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க இறுதி தருணத்தில் மாற்றப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜே.வி.பி.யின் தலைவரும் அக்கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திசாநாயக்க என்பவர் ரணில் விக்ரமசிங்கவின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படும் ஒருவர்.

இதனால், ரணில் விக்ரமசிங்க கூறினால், தனது வேட்பாளர் பதவியையும் விடுவதற்கு எந்த நேரத்திலும் தயாராகவே அவர் இருக்கின்றார்.

இந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக பல தடவைகள் ஜே.வி.பி. முன்னின்று செயற்பட்டுள்ளது. ஐ.தே.கட்சியின் நலனுக்காகவே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. களமிறங்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்தும் எதிர்த்தரப்பில் இருப்பதாக தன்னைக் காட்டிக் கொண்டு, இறுதி நேரத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய வரலாறு ஜே.வி.பியிற்கு நிறையவே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.