வடக்கு நோக்கி தமது கவனத்தை திருப்பும் தேசிய மக்கள் சக்தி

Report Print Malar in அரசியல்
100Shares

தேசிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் புத்திஜீவிகள் அமைப்பினர் வடக்கிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியானது அமைக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.

அந்தவகையில், குறித்த கட்சியின் புத்திஜீவிகள் அமைப்பினர் வடக்கு மக்களின் கோரிக்கைகள் குறித்து ஆராய்வுகளை மேற்கொள்வதற்கு அங்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் கொள்கைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளனர்.

புத்திஜீவிகள் அமைப்பில் சட்டத்தரணிகள் உபுல் குமாரப்பெரும, அஜித் கல்லோன, அசோக பீரிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணிக்கும் வடக்கு தமிழ் மக்களுக்கும் இடையிலான புரிதல்கள் சமகாலத்தில் அதிகரித்திருப்பதாகவும், தமிழ் மக்கள் பிரதான கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கு எந்தவிதமான நியாயமும் இல்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் தேர்தல்களில் வடக்கு மக்கள், மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து புதிய மாற்றத்தினை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையை தாம் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.