நாட்டை விட்டு ஓடியவரால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது!

Report Print Steephen Steephen in அரசியல்

தேசிய பாதுகாப்புதான் பிரச்சினை என்றால், அதற்கு கேர்ணல் ஒருவர் உத்தரவாதத்தை வழங்க முடியாது என்பதுடன் அதற்காக இராணுவ தளபதி ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துமாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் போர் உக்கிரமடைந்த நேரத்தில் விஜய விமலவீர, டென்சில் கொப்பேகடுவ போன்ற மிகத் திறந்த ஆளுமைகளை கைவிட்டு நாட்டை விட்டு ஓடிய ஒருவரால் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதாரம், சர்வதேச தொடர்புகள், வேலைவாய்ப்பு போன்றவை குறித்து பிரச்சினைகள் இல்லை என்றால், ஒரே பிரச்சினை தேசிய பாதுகாப்பு என நினைத்தால், பொதுஜன பெரமுனவினர், பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட துறைச்சார்ந்த நபரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமாயின் பொதுஜன பெரமுன இராணுவ தளபதி ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால், அதனை சரியாக செய்துக்கொள்ள முடியும். இலங்கையில் இருக்காத, விடுதலைப் புலிகளின் போர் உக்கிரமடைந்து, வடமராட்சி நடவடிக்கை நடக்கும் போது, விஜய விமலரத்ன, கெப்பேகடுவ போன்ற சிரேஷ்ட அதிகாரிகளை கைவிட்டு சென்ற கேர்ணல் ஒருவரால் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது.

சவேந்திர சில்வா இருக்கின்றார். அவர் போருக்காக உயிரை துச்சமென மதித்து செயற்பட்டவர், அவரை அழைக்கலாம். அல்லது அண்மையில் ஓய்வுபெற்ற மஹேஷ் சேனாநாயக்கவை வேட்பாளராக நிறுத்தலாம்.

பொருளாதாரம், சர்வதேச தொடர்புகள் உட்பட ஏனைய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த தேவையில்லை என்றால் தேசிய பாதுகாப்பு மட்டுமே முக்கியமாக இருக்குமாயின் இந்த இராணுவ தளபதிகளில் ஒருவரை பொதுஜன பெரமுன வேட்பாளராக நிறுத்தலாம்.

அல்லது இராணுவ தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவை வேட்பாளராக நிறுத்துங்கள். தேசிய பாதுகாப்பை மாத்திரம் அறிந்துக்கொண்டு ஒரு நாட்டை ஆட்சி செய்ய முடியாது.

ஹிட்லரும் சிறந்த இராணுவ வீரர். கோத்தபாயவையும் சிலர் கோட்லர் என்று அழைக்கின்றனர், என்ன நடக்க போகிறது என்று பார்ப்போம் என மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.