கோத்தாவிற்கு பதிலாக ஷிரந்தி..? சமல் ராஜபக்ச கூறும் தகவல்

Report Print Jeslin Jeslin in அரசியல்

ராஜபக்ச குடும்பத்தில் எவரும் தமது பாரியாரை தேர்தல்களில் ஈடுபடுத்தவுமில்லை, ஈடுபடுத்தப்போவதுமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது, கோத்தபாயவிற்கு நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டால் இறுதி நேரத்தில் ஷிரந்தி ராஜபக்ச அவருக்கு பதிலாக போட்டியிடுவாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,

எதிர்க்கட்சிகள் பல இட்டுக் கதைகளை கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அத்துடன் ராஜபக்ச குடும்பத்தில் எவரும் தமது பாரியாரை தேர்தல்களில் ஈடுபடுத்தவுமில்லை, ஈடுபடுத்தபோவதுமில்லை.

கோத்தபாயவுக்கு எந்தவிதமான நெருக்கடிகளும் ஏற்படாது. அரசியல் பழிவாங்கல்களே நடைபெறுகின்றன.

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டிருந்தார் என்பதற்காக கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை பறித்தவர்கள் எந்த அடிப்படையில் பிறிதொரு நாட்டின் குடியுரிமையைக் கொண்டவரை மத்திய வங்கி ஆளுநராக நியமித்தார்கள்.

மோசடிகள் இடம்பெற்ற பின்னரும் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்காதிருக்கின்றார்கள் இது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.