பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனை வரை மக்கள் துயரத்தில்! நாமல் ராஜபக்ச கவலை

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் தற்போதைய அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஸ்திரதன்மை இல்லாத காரணத்தினால், நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும், வடக்கில், இருந்து தெற்கின் தேவேந்திரமுனை வரையும் தேவேந்திரமுனையில் இருந்து பருத்தித்துறை வரையிலும் நாட்டு மக்கள் துயரங்களை அனுபவித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பன்னல சனசமூக மண்டபத்தில் இன்று நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் இளம் பெண்கள் அதிகார சபையை ஸ்தாபிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஒரு புறம் சமூகம் என்ற வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.ஈஸ்டர் தாக்குதலுடன் வாழ்க்கை தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ளது. பிள்ளைகள் கற்கும் பாடசாலைகளை பாதுகாக்க பெற்றோர் பாதுகாக்க வேண்டிய சமூகமாக மாறியுள்ளது.

இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் படத்தை பதிவேற்றினால். அந்த இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்படுகிறார். பொருளாதாரம் சரிந்துள்ளது. உர மானியம் இரத்துச் செய்யப்பட்டது. அரிசியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய ஆரம்பித்தனர்.

பயிரிட்டு உண்பதை விட நாம் இறக்குமதி செய்து சாப்பிடுவோம், அதுதான் லாபம் என பிரதமர் கூறினார். விவசாயிகளின் பொருளாதாரம் சரிந்தது. நாட்டை சுற்றியும் கடல், மீன்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய ஆரம்பித்தனர். வரிக்கு மேல் வரிவிதிக்க ஆரம்பித்தனர் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.