ரணிலுக்கு சவாலான சஜித்..!

Report Print Jeslin Jeslin in அரசியல்

அமைச்சர் சஜித் பிரேமதாச ஒருபோதும் கோத்தபாய ராஜபக்சவிற்கு சவாலானவர் அல்ல. அவர் ரணில் விக்ரமசிங்கவிற்கே சவாலானவர் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாச போட்டியிட்டாலும் அது எமக்கு எவ்வாறான சவாலையும் ஏற்படுத்தாது.

அந்த சவால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கின்றது. சஜித் பிரேமதாச ரணில் விக்ரமசிங்கவிற்கே சவாலாக இருக்கின்றார்.

ஆகவே கோத்தபாய ராஜபக்சவிற்கு சஜித் பிரேமதாச ஒருபோதும் சவாலானவர் அல்ல. அவர் ரணில் விக்ரமசிங்கவிற்கே சவாலானவர்.

அதேபோல ரணில் விக்ரமசிங்கவும் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஒருபோதும் சவால் அல்ல, அவர் சஜித் பிரேமதாசவிற்கே சவாலானவர்.

தங்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொள்ளும் இவர்களிடம் எவ்வாறு நாட்டை ஒப்படைப்பது.

ரணில், கரு, சஜித் ஆகிய மூவரில் யாராவது ஒருவர் ஜனாதிபதியாக வந்தாலும் அந்த நாள் தொடக்கம் இப்போதிருக்கும் ஜனாதிபதி பிரதமர் முரண்படும் ஆட்சியைப் போன்ற அரசாங்கத்தையே பார்க்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.