அரசாங்கத்தின் அறிவிப்பின் பின் சிக்கிய இருவர்! விளக்குகிறார் மகிந்த ராஜபக்ச

Report Print Sujitha Sri in அரசியல்
153Shares

அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் தவறாக பயன்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

அவசரகாலச் சட்டத்தை நீக்கியதில் நன்மை உண்டு என்பது போலவே தீமையும் உண்டு.

என்ற போதிலும் அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தியுள்ளது.

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய எல்லோரையும் பிடித்து விட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சில நாட்களின் பின் இன்னும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவசரகாலச் சட்டத்தை பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் பயன்படுத்தினால் அது நல்லது.

ஆனால், மாற்றிப் பிரயோகிப்பதனாலேயே நாம் எதிர்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.