ஐக்கிய தேசிய கட்சியின் பிளவுக்கு காரணம் வாஸ்து தோசமா?

Report Print Kanmani in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சிக்குள் சமீப காலமாக தொடர்ந்தும் நிலவும் பிரச்சினைகளுக்கு, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தா கட்டடத்தில் காணப்படும் வாஸ்து தோசமே காரணமென புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தரப்பில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையே மோதல் நிலை தீவிரமடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்திலேயே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

சிறிகொத்தா கட்டடத்தில் காணப்படும் வாஸ்து தோசமே பிரச்சினைகளுக்கு காரணமெனவும், இது குறித்து தலைமைக்கு பல தடவைகள் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறிகொத்தா கட்டடத்தில் காணப்படும் வாஸ்து தோசத்தினை சரி செய்யும் வரை கட்சிக்குள் உட்பூசல்கள் ஏற்படுவதினை தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.