சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கிய தமிழர்கள் கோத்தபாயவிற்கு ஆதரவு வழங்க முடியாதென கூற முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும கேள்வி எழுப்பியுள்ளார்.
வார இறுதி பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி - சிறுபான்மையினருடைய வாக்குகளை பெற முடியாத ஒருவரால் பதவிக்கு வர முடியாது என்ற நிலைமை இருக்கின்ற போது கோத்தபாய மீது தமிழர்கள் கடந்த காலங்களில் பல எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் அவருக்கு தமிழ் மக்கள் ஆதரவு கிடைக்குமா?
பதில் - 2010ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கிய தமிழ் மக்கள் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்க முடியாது என கூற முடியுமா?
இராணுவத் தளபதியாக இருந்த ஒருவரை ஜனாதிபதியாக ஏற்க முடிந்தால் ஏன் கோத்தபாய ராஜபக்சவை எதிர்க்கின்றனர் என வினவியுள்ளார்.