கோத்தபாயவின் தோல்வி உறுதியானதா? வெளியான தகவல்களால் அதிர்ச்சியடைந்துள்ள ராஜபக்ஷர்கள்

Report Print Vethu Vethu in அரசியல்

சமகால அரசியல் நிலைமைகளை ஆராயமல் கோத்தபாய ராஜபக்ஷ தேர்தல் களத்தில் குதித்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடிக்காத சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கையை கோத்தபாய ஆரம்பித்தமை தவறானது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேர்தல் களத்தின் சாத்திய நிலையை ஆராய்வதற்கு தங்களை ஈடுபடுத்தாமை மற்றும் இந்த செயற்பாட்டிற்காக தங்களை இறுதி சந்தர்ப்பத்திலேயே இணைத்துக்கொண்டமையினால் முழுமையான நடவடிக்கை தோல்வியடைந்துள்ளது. இதற்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மத ஸ்தலங்களில் பூஜை வழிப்பாடுகளில் ஈடுபட்டார். 18 ஆம் திகதி வரையில் முழுமையான நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அடுத்த சில நாட்களில் கோத்தபாய சென்ற இடங்களில் எதிர்பார்த்த ளவு மக்கள் கூட்டம் காணப்படவில்லை. கோத்தபாயவுக்கு வாக்குறுதியளித்த ஊடக நிறுவனங்கள் ஆதரவு வழங்கவில்லை. பணம் செலுத்தப்பட்ட நிகழ்வுகளின் நேரங்களும் குறைக்கப்பட்டுள்ளன. அந்தளவிற்கு ஈர்ப்பு இல்லாமையே அதற்கு காரணமாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களிலும் கோத்தபாயவுக்கான பிரச்சார நடவடிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதனை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் காணப்பட்ட நிலைமையுடன் ஒப்பிடும் போது தற்போது 15 வீதம் வரை அவரது பிரபலத்தன்மை வீழ்ச்சியடைந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் ராஜபக்ஷர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் களம் அவர்களுக்கு சாதகமான நிலையில் இல்லை என தகவல் வெளியாகி உள்ளமை அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Offers