கோத்தபாய ஜனாதிபதி, மஹிந்த பிரதமர், மைத்திரி சபாநாயகர்

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினால் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகவும், மஹிந்த ராஜபக்ச பிரதமராகவும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகராகவும் பதவி வகிப்பார்கள் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது குறித்த பதவி விடயங்கள் பற்றி பேசப்படவில்லை. எனினும், கட்சியின் முக்கியஸ்தர்கள் புத்திஜீவிகள் போன்றவர்கள் இந்த விசேட யோசனைத் திட்டத்தை முன்மொழிந்துள்ளனர்.

இதேவேளை, சஜித் பிரேமதாச சுயாதீனமாக போட்டியிடவும் ரணில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.