பிரதமருக்கே அதிகாரம் எனும் ஜனாதிபதியின் கருத்துக்கு மறுப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

19ஆவது அரசியலமைப்பின் கீழ் அடுத்து வரும் ஜனாதிபதி அதிகாரமற்றவராக இருப்பார் என ஜனாதிபதி கூறிய கருத்தை சட்டத்தரணிகள் மறுத்துள்ளனர்.

சுதந்திர கட்சியின் மாநாட்டின் போது ஜனாதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ள நிலையில் சட்டத்தரணிகள் இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சட்டத்தரணி மனோஹரா டி சில்வா இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்த போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

19ஆவது திருத்தத்தின் படி பொதுமக்கள் வழங்கும் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கும். அதில் பாதுகாப்பு அமைச்சும் உள்ளடங்கியிருக்கும் என்று மனோஹரா டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

19ஆவது அரசியலமைப்பின் கீழ் அடுத்து வரும் ஜனாதிபதி அதிகாரமற்றவராக இருப்பார் எனவும் பாதுகாப்பு அமைச்சு கூட அவர் வசம் இருக்காது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தார்.

வலிமையான பிரதமர் ஒருவரை தெரிந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையிலேயே இலங்கையின் அரசியலமைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தி வரும் சட்டத்தரணிகள் ஜனாதிபதியின் இந்த கருத்தை மறுத்துள்ளனர்.