மாகாணசபையின் அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும்: ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்

மாகாணசபைகளிடம் இருக்கும் அதிகாரங்களை மேலும் அதிகரிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரத்தை பரவலாக்குவதன் மூலம் அந்த அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தினால், புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனது.

எனினும் அதிகார பரவலாக்கம் தொடர்பாக இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டவாக்க சபையை கூட்டி கலந்துரையாடி அது தொடர்பாக அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.