பதவிக்காலம் பற்றி விளக்கத்தை கோரும் ஆவணத்தை தயார்படுத்தியுள்ள ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்
42Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலம் எப்போது முடிகிறது என்று உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கும் ஆவணத்தை தயார் செய்துள்ளதாக தெரியவருகிறது.

எனினும், எப்போது உயர் நீதிமன்றத்திடம் இது குறித்து விளக்கம் கேட்பது என்பது தொடர்பாக இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

நடைமுறையில் இருந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட தனது பதவிக்காலம் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்திட்ட 2015ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகின்றதா அல்லது அதற்கு முன்னர் ஆரம்பமாகியதா என ஜனாதிபதி உயர் நீதிமன்றத்திடம் சட்ட விளக்கம் கோரவுள்ளார்.

19ஆவது திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்த நாளில் இருந்து ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆரம்பமாகிறது என உயர் நீதிமன்றம் கூறினால், ஜனாதிபதித் தேர்தல் 2020ஆம் ஆண்டு மே மாதம் வரை தள்ளி போகும் என தெரிவிக்கப்படுகிறது.