மைத்திரிக்காக மகிந்தவிடம் இரகசிய கடிதத்தை வழங்கிய தயாசிறி

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் முடியும் வரை பதவி வகிக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்து விட்டு, அதன் பின்னர் ஒரு நாளில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம் இரகசியமாக கடிதம் மூலம் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பழைய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஆறு ஆண்டு காலத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலத்தில் ஓராண்டை குறைத்து, மிகப் பெரிய அர்ப்பணிப்பை செய்துள்ளதால், தற்போது அவருக்கு இருக்கும் ஐந்தாண்டு காலத்தை முழுமையாக பூர்த்தி செய்த பின்னர், தேர்தலை நடத்துமாறு, தயாசிறி ஜயசேகர தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கியுள்ள கடிதத்தில் கேட்டுள்ளார்.

எனினும், தேர்தல் ஆணைக்குழு இது சம்பந்தமாக இதுவரை தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை. இந்த கோரிக்கையை நிறைவேற்றினால், ஜனாதிபதித் தேர்தலை நடத்தக் கூடிய இறுதி தினம் டிசம்பர் 7ஆம் திகதியாகும்.

டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து சாதாரண தரப் பரீட்சை நடக்கவிருப்பதால், இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது நடைமுறை சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்கள் கூறுகின்றன.