எதிர்க்கட்சித் தலைவருக்கும் சவுதி அரேபிய சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

சவுதி அரேபிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அப்துல்லா பின் மொஹமட் பின் அல் சேக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் இந்த சந்திப்பு இன்று நடைபெற்றுள்ளது.

மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் சவுதி அரேபிய அரசுடன் நெருங்கி செயற்பட்டமைக்கு சவுதி சபாநாயகர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் அப்துல் நஸீர் பின் ஹூசைன் அல் ஹர்தி, முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் ஹர்ச விஜேவர்தன ஆகியோரும் கலந்துக்கொண்டுள்ளனர்.