எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் பிரசார பொறுப்பு பசில் ராஜபக்சவிடம் ஒப்படைப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான பிரசார பொறுப்புக்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்.எல்.பி.பி) அதன் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவிடம் ஒப்படைத்துள்ளது.

இதன் பிரசார பணியாளர்களுக்கான உதவியாளர்களாக கட்சியின் உறுப்பினர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரமேஷ் பதிரன, மோகன் டி சில்வா, சந்திம வீரக்கோடி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமரதுங்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் சம்லி விதானாச்சி, துஷன் காரியவாசம் மற்றும் சமன் அதுக்கோரல ஆகியோரே உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.