சுமந்திரனுடன் யாழ்ப்பாணத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாச

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

யாழ். வலிகாமம் கிழக்கு ஊரெழுவில் தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மாதிரி கிராமமொன்று இன்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

274ஆவது மாதிரி கிராமமான பொக்கணை கிராமமே வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இங்கு 19 குடும்பங்களுக்கான வீடுகள், அந்த வீடுகளில் நீர் மற்றும் மின்சார வசதி, உள்ளகப் பாதை வசதி, பிரசேவப் பாதை வசதி என்பனவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர், வலி. கிழக்கு பிரதேச சபை செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சித்தாத்தன், என்.சரவணபன், அரச அதிகாரிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers