யாழில் சஜித்துடன் கூட்டமைப்பு இரகசிய சந்திப்பு! வெளிவந்துள்ள தகவல்கள்

Report Print Malar in அரசியல்

அமைச்சர் சஜித் பிரேமதாச, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்களுடன் யாழில் இன்று மேற்கொண்ட உயர் மட்ட கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்த பின் தமிழர் பிரச்சினையை எப்படி அணுகுவது என்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இது குறித்து சஜித் கூறுகையில், ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் ஆறு மாதங்களுக்குள் இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

அதற்கு மேல் இழுத்தடித்தால் தீர்க்க முடியாமல் போய்விடும், என்பதால் ஜனாதிபதியாகிய ஆறு மாதங்களிற்குள் இனப்பிரச்சினையை தீர்ப்பேன்.

சிங்கள மக்களை குழப்பமடைய வைத்து தீர்வொன்றை எட்ட முடியாது என்ற யதார்த்தத்தை நாம் புரிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எனினும் இனப்பிரச்சினை பற்றிய தெளிவான பார்வையை சஜித் பிரேமதாச வெளிப்படுத்தவில்லை என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேவேளை சிங்கள மக்களை குழப்பாமல் நுணுக்கமாக செயற்பட வேண்டும். ஆனால், அதற்கு முன் ஐ.தே.க தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானித்து விட்டீர்களா? என த.சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய குழப்பம் ஐ.தே.கவிற்குள் நீடிக்கிறது. யார் வேட்பாளர் என்ற குழப்பத்தால், மக்கள் இங்கு குழப்பமடைந்துள்ளனர்.

யார் வேட்பாளர் என்பதில் உடன்பாட்டிற்கு வந்துவிட்டீர்களா? நீங்கள் போட்டியிடுவீர்களா? என சுமந்திரன் வினவியுள்ளார்.

இது குறித்து சஜித் பிரேமதாச கூறுகையில்,இனப்பிரச்சினை தீர்வு விவகாரம் பெரிய விடயம். அதனால் எப்படியான தீர்வை எட்டுவது என்ற கலந்துரையாடலை ஒரே சந்திப்பில் எட்ட முடியாது.

பல்வேறு கருத்துக்களில் இருந்து, வடிவமொன்றை கண்டுபிடிப்போம். இது அதற்கான முதல் சந்திப்பாக இருக்கட்டும்.

அத்துடன், நான் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் விட்டுக்கொடுக்கலாம். எனக்கு அதில் ஆட்சேபனையில்லை.

எனக்கு இன்னும் காலமிருக்கிறது. ஆனால், என்னை தவிர்த்தால், கட்சிக்குள் வெற்றியடைய கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்?

வேறு யார் போட்டியிட்டாலும், கட்சி தோல்வியடையும். கட்சி வெற்றியடைய வேண்டுமென்பதற்காகவே போட்டியிட விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலாம் இணைப்பு

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

யாழில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்தின, யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இச்சந்திப்பு எதற்காக நடைபெற்றது எனவும், என்ன விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதெனவும் எந்தவொரு தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video


Latest Offers