முஸ்லிம் மக்கள் தொடர்பில் கோத்தாவுக்கு தேரர் வழங்கியுள்ள மிகப்பெரிய பொறுப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்தத்தை முடித்து விட்டு தமிழர்கள் மீது இருந்த பயங்கரவாத முத்திரையை நீக்கியது போல முஸ்லிம்களின் மீது தற்போதுள்ள பயங்கரவாத முத்திரையை விரைவில் நீக்கிவிடுமாறு பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெபிலியான விகாரையில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டிலுள்ள சாதாரண முஸ்லிம் மக்கள் மீது ஒட்டப்பட்டுள்ள பயங்கரவாத முத்திரை மற்றும் குற்றச்சாட்டிலிருந்து அவர்களை விடுவிக்கும் பொறுப்பு நாட்டின் எதிர்கால தலைவராகிய கோத்தபாய ராஜபக்சவிற்கு இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers