ஐதேக முக்கியஸ்தர் ஒருவரின் பதவிக்கு வந்துள்ள ஆபத்து

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவி பறிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கபீர் ஹாசீம், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சார்பில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஹாசீமை தவிசாளர் பதவியிலிருந்து நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோத்தபாயவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியமை, ஜனாதிபதி மைத்திரியுடன் இரகசியமாக தொடர்பு பேணியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கபீர் ஹாசீம் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கபீர் ஹாசீமை பணி நீக்கும் ஆவணங்கள் தயாரிக்கப்படும் எனவும், இது குறித்து யோசனை அடுத்து வரும் செயற்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் எனவும் தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தாம் பதவிகளை எதிர்பார்ப்பதில்லை என்ற அர்த்தத்தில் கபீர் ஹாசீம் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.