சுதந்திரக்கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த ஐ.தே.கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மட்டுமல்லாது, ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அநுராதபுரம் - நொச்சியாகமவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

“அச்சமின்றி இருங்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வரலாற்றில் இதுபோன்று சிரமங்களை எதிர்நோக்கி இருக்கின்றது.

சிரமங்களை தாண்டி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் வலுவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.