லிமினி வீரசிங்கவுடனான தனது காதல் கதையை வெளியிட்ட நாமல் ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது காதல் தொடர்பான கதையை பத்திரிகை ஒன்றிடம் வெளியிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச அவரது காதலியான லிமினி வீரசிங்க என்ற பெண்ணை இந்த மாதம் 17ஆம் திகதி திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில் தனது காதல் பற்றி மேலும் தெரிவித்துள்ள நாமல்,

இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த மரத்தன் போட்டி ஒன்றில் இருந்தே எங்களது காதல் கதை ஆரம்பமாகியது.

நாங்கள் இருவரும் விரும்பிய பின்னர், எமது பெற்றோரின் ஆசிர்வாதத்தை எதிர்பார்த்தோம்.

இதனடிப்படையில், ஒரு வருடத்திற்கு முன்னர் எமது தொடர்பு குறித்து பெற்றோருக்கு தெரியப்படுத்தினோம்.

லிமினியின் பெற்றோரும், எனது பெற்றோரும் எமது காதலை ஏற்றுக்கொண்டு ஆசிர்வாதம் செய்தனர். இது எமக்கு பெரிய பலத்தை கொடுத்தது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போதே எமது காதல் தொடர்பாக பலரும் கவனம் செலுத்தியிருந்தனர்.

இதன் பின் யோஷித்த ராஜபக்சவின் பதிவு திருமணத்தின் போது, நாங்கள் காதலர்கள் என பலர் அடையாளம் கண்டு கொண்டனர்.

எமது நெருங்கிய குடும்ப உறவினர்களுடன் லிமினியும் திருமணத்தில் கலந்து கொண்டார். இதுதான் எங்களது காதல் கதை என்பதுடன், மக்கள் அறிந்து கொண்ட விதம் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.