தலைவர் இல்லாமல் தவிக்கும் ஐ.தே.க! கூறுகிறார் ரில்வின் சில்வா

Report Print Gokulan Gokulan in அரசியல்
33Shares

ஐக்கிய தேசியக் கட்சியானது தலைவர் ஒருவர் இல்லாது திண்டாடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எமது செய்திச் சேவையினூடாக இன்று தொடர்பினை மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டு மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்துள்ளது.

ஒரு கட்சியின் தலைவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை நாட்டு மக்கள் நிராகரிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அந்த அளவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியை மக்கள் வெறுத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குடும்ப ஆட்சியினை நாட்டில் இருந்து நாம் அகற்றிய போதும் பதவிமீது ஆசை கொண்ட ராஜபக்ச குடும்பத்தினர் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வெறிப்பிடித்து செயற்படுவதாக தெரிவித்தார்.

அது ஒரு புறம் இருக்க, பதவி பேராசையால் ஐக்கிய தேசியக் கட்சியினரான பிரதமர் ரணில், கருஜயசுரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் ஆகியோர் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.