ஐக்கிய தேசியக் கட்சியில் தற்போது தலைவர் இல்லை

Report Print Steephen Steephen in அரசியல்

ஆட்சி அதிகாரத்தில் இருந்த தரப்பினர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அவர்களின் தோல்வியை புரிந்துக்கொள்ள முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகளின் வரலாற்றில் முதல் முறையாக கட்சியின் தலைவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்சியில் இருக்கும் ஏனையோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்சிகளுக்கு இடையில் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ரணில், சஜித், கரு என ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியில் தற்போது தலைவர் இல்லை.

தமது ஆட்சிக்காலத்தில் நாட்டை அபிவிருத்தி செய்திருந்தால், ஏன் மீண்டும் நாட்டை அபிவிருத்தி செய்ய போவதாக கூற வேண்டும். சில கட்சிகள் நாட்டுக்கு சேவை செய்ய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவில்லை.

தமக்கும், தம்மை சார்ந்தவர்களுக்கும் சேவைகளை செய்யவே அந்த கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றன எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.