ரூபவாஹினி தொடர்பாக உண்மையை வெளியிட்டுள்ள அமைச்சர் ருவான்

Report Print Steephen Steephen in அரசியல்

தொடர்ந்தும் நஷ்டத்தில் இயங்கி வரும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவத்தை மாற்ற பல முறை முயற்சித்த போதும், அது தோல்வியடைந்ததாக ஊடகத்துறை அமைச்சரும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

முகாமைத்துவத்தில் மாற்றங்களை செய்ய தான் முயற்சித்த போது, ஜனாதிபதி அதற்கு தடையாக இருந்து வந்தாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க, திறைசேரி, வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்து மாதந்தோறும் 40 மில்லியன் ரூபாயை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், தான் மேற்கொண்ட முயற்சியின் இறுதி முடிவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்து விட்டதாகவும் அமைச்சர் ருவான் விஜேவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டு பதிவில் கூறியுள்ளார்.