சஜித்தை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது! அமைச்சர் ஹர்ச

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வல்ல என அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராகவும் சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராகவும் அறிவித்து, ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நியமிப்பதன் மூலமே ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை வெல்ல வைக்க முடியும். ரணில் விக்ரமசிங்கவுக்கும் எமக்கும் இடையில் இருப்பது தனிப்பட்ட பிரச்சினையல்ல. வேட்பாளரின் பிரபலத்துவம் சம்பந்தமான பிரச்சினையே இருக்கின்றது.

அத்துடன் சஜித் பிரேமதாச வெற்றி பெற்ற பின்னர், சஜித் - ரணில் அரசாங்கம் குறித்து ஆராய்ந்து பார்க்க முடியும் எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்