ஐக்கிய நாட்டுக்குள் கூடியளவில் அதிகாரங்கள்! 2015ஆம் ஆண்டுக் கதையை மீண்டும் கூறிய அமைச்சர் சஜித்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய இலங்கைக்குள் போதுமான அளவில் அதிகாரங்களை பரவலாக்க தான் இணங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியில் நேற்று பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட அமைச்சர் சஜித், கண்காட்சி வளாகத்தில் இருக்கும் ஊடக நிலையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.

வெளிநாடுகளுக்கு சென்று ஒரு கதையை கூறி விட்டு, மீண்டும் இலங்கை திரும்பியதும் வேறு கதையை கூறும் இரட்டை நிலைப்பாடு என்னிடம் இல்லை என்பதை தெளிவாக கூற வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் கூடியளவில் அதிகாரத்தை பரவலாக்கி, அதன் மூலம் அரசியல், பொருளாதார, சமூக ரீதியான வலுப்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும். அனைத்து விடயங்களை நடக்கும் பயணத்தை செல்ல நாங்கள எதிர்பார்த்துள்ளோம்.

நாட்டில் வாழும் எந்த இனத்திற்கும் நாம் இரண்டாம், மூன்றாம் நிலை குடிகள் என்ற உணர்வு ஏற்பட்டு விடக் கூடாது. நாம் அனைவரும் ஒன்று. ஒரு நாடு, ஒரு தாய் நாடு, ஒரே மக்கள். இன, மத பேதங்கள் அடிப்படையில் உயிர்வு தாழ்வு இல்லை. அனைவரும் சமமானவர்கள். அனைவரும் சம அளவில் நடத்தப்படுவார்கள் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்று கூட்டு அரசு ஒன்று உருவாக்கப்பட்டது. அப்போது பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டு, அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். எனினும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவேன் என்று தெரிவித்துள்ள அமைச்சர் சஜித் பிரேமதாசவும் அவ்வாறே தெரிவித்துள்ளார்.